1920 ஆண்டிலிருந்து மதிப்பு ஏற்றம் செய்யப்பட்ட தேங்காய்த் தயாரிப்புக்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்கையில் இலங்கையில் முன்னோடி நிறுவனமாக திகழ்கின்ற வரையறுக்கப்பட்ட எஸ். ஏ.சில்வா அன்ட் சன்ஸ்(தனியார்) நிறுவனம் உள்நாட்டுச் சந்தைக்கு சில்வர்மில் ரியல் கொக்கனட் மில்க் தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
உயர் தரத்தைப் பேணும் வகையில் சுத்தமான முறைகளில் பொதி செய்யப்படும் சில்வர்மில் ரியல் கொக்கனட் மில்க் ஒரு டேற்றா பேக்கில் வருகின்றது.
ISO 22000, HACCP, Kosher மற்றும் BRC ஆகிய தரச் சான்றிதழ்களை பெற்றுள்ள இவ் நிறுவனம் தேங்காய் தயாரிப்புக்கள் பெறுகை, தயார் செய்தல் மற்றும் உலகில் பிரதான சந்தைகளிற்கு ஏற்றுமதி செய்தல் முதலியவையில் ஈடுபட்டுள்ளது. அதி உயர் தர செய்முறைகளை பின்பற்றி தூய தேங்காய் பால் தயாரிக்கப்படுகின்றதுடன் டெற்றா பேக்கில் பொதி செய்யப்படும் போது தேங்காய்ப்பாலை செரிக்கத்தக்கதாக்குவதுடன் UHT தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படும். UHT தொழில் நுட்பம் என்பது தற்போது உலகில் உள்ள மிக உயர்ந்த நுண்ணுயிர் நீக்கும் தொழில்நுட்பமாகும். UHT தொழில் நுட்பம் பயன்படுத்தும் போது தேங்காய் பாலை உயர் வெப்ப நிலைக்கு கொண்டுவருவதுடன் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை பேணுவதற்காக அது மிகக் குறுகிய நேரம் வரை மட்டுமே நீடிக்க வைக்கும். கையால் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய் பாலை விட மேற்கூறப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் 330 மில்லி லீற்றர் டெற்றா பேக்கில் வரும் தேங்காய் பால் தரத்தில் உயர்ந்துள்ளது. சில்வர்மில் ரியல் கொக்கனட் மில்க்கில் செயற்கை நிறம், செயற்கை சுவையூட்டப்படும் பொருட்கள் மற்றும் பதப் பொருட்கள் அற்றது.
சில்வர்மில் ரியல் கொக்கனட் மில்க் துப்புரவான முறைகளினால் தயாரிக்கப்படுவதுடன் டெற்றா பேக்கின் டுவிஸ்ட் கெப், பொதியை திறக்கும் வரை தேங்காய் பாலை புதிதாகவும் சுவையாகவும் வைக்க உதவுகின்றது.
பொதியை திறந்த பிறகு எஞ்சியிருக்கும் தேங்காய் பாலை சாதாரண குளிர்சாதனப் பெட்டி ஒன்றில் வைத்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஒவ்
வொரு பொதியிலும் நுண்ணுயிர்கள் நீக்கப்பட்ட உயர்தர தேங்காய்ப்பால் அடங் கியுள்ளதுடன் எவ்வகையான உணவு தயாரிப்புக்கும் பயன் படுத்தலாம்.


0 Comments