யுத்தம் காரணமாக பிரிந்து வட்ஸ்அப் மூலம் இணைந்து கொண்ட உடன்பிறப்புகள் யுத்தம் காரணமாக பிரிந்து 36 ஆண்டுகளின் பின்னர் வட்ஸ்அப் சமூக வலைபின்னல் மென்பொருள் ஊடாக ஒன்றிணைந்த இலங்கை உடன்பிறப்புக்கள் பற்றி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தமிழகத்தின் திருச்சியில் இவ்வாறு குறித்த சகோதரரும் சகோதரியும் ஒருவரை ஒருவர் 36 ஆண்டுகளின் பின்னர் பார்த்துள்ளனர்.
72 வயதான சமுவெல் என்பவரையும், 76 வயதான ஞானப்பூ என்ற பெண்ணையும் வட்ஸ்அப் இணைத்துள்ளது. இந்த இருவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமுவெலின் சகோதரி 1979ம் ஆண்டு திருமணம் முடித்து இந்தியாவின் தூத்துக்குடியில் குடியேறினார். 1982ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது சமுவெல் இந்தியாவில் குடியேறினார்.
சமுவெல் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் அகதியாக வாழ்ந்து சென்றார். சமுவெலும் அவரது 36 வயதான புதல்வரும் பல தடவைகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வெலி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஞானப்பூவை தேடி வந்துள்ளனர்.
எனினும், தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என தெரிவிக்கின்றனர். இறுதியில் வட்ஸ்அப்பில் ஞானப்பூவின் புகைப்படம் மற்றும் விபரங்களை வெளியிட்டதனைத் தொடாந்து அவரை கண்டு பிடிக்க முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது.


0 Comments