Subscribe Us

header ads

6 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 35 வயது பஞ்சாயத்து உறுப்பினர்



ராஜஸ்தான் மாநிலம்  காங்ரார் கிராம சபை உள்ளூர் உறுப்பினராக இருப்பவர் ரத்தன் லால் ஜாட் (வயது 35)  கடந்த ஜூன் 23 ந்தேதி இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவருக்கும் கிராமத்தில் உள்ள கோவிலில் ரகசியமாக திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்த திருமணத்திற்கு  உள்ளூர் கல்யாண தரகர் ஜமுனா பாய் பணத்தை வாங்கி கொண்டு ஏற்பாடு செய்து உள்ளார்.  ரத்தன் லால்  பயந்தாலும் தேவையானவற்றை பண்டைய உள்ளூர் நடபரதா என்ற  அமைப்பு செய்து உள்ளது. 

ஒரு திருமணமான ஆண்  ஒரு திருமணம்மான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்து அது தெரியவந்தால்  சம்பந்த பட்ட கணவனுக்கு இழப்பீட்டு வழங்கி விட்டு இரு காதலர்களும் திருமணம் செய்து கொள்ளலாம என இந்த அமைப்பு உத்தரவிடுவது வழக்கம்

ரத்தன் லால் ஜாட் தனி ஆளாக உள்ளார் அதனால் பழைய பாரம்பரிய வழக்கபடி ஆறுவயது சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டார்.மேலும் சிறுமியினுடைய வீட்டார் வெளியிடபடாத ஒரு தொகை வழங்கி உள்ளனர். தற்போது சிறுமி தன்னை விட 29 வயது மூத்த நபரை திருமணம் செய்து உள்ளார்.ஆனால் அவர் தொடர்ந்து தனது வீட்டிலேயே வாழலாம்.இதுதான் அங்குள்ள பாரம்பரிய வழக்கம் 

போலீசார்  2006 குழந்தைகள் திருமண தடுப்பு சட்டப்படி ரத்தன் லாலை ஜாட்டை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கயேந்திர சிங் கூறும் போது நாங்கள் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான போதுதான் நாங்கள் இந்த திருமணம் குறித்து தெரிந்து கொண்டோம். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினோம்.

பழைய பாரம்பரியவழக்கப்படி ரத்தன் லால்  சிறுமியை திருமணம் செய்து உள்ளார். ஆனால் இது  குழந்தை திருமண சட்டப்படி குற்றமாகும். இதை தொடர்ந்து அவரை கைது செய்து உள்ளோம்.

இது போல் பல் வேறு குழந்தை திருமணஙகளை நடத்தி வைத்ததாக கல்யாண தரகர் ஜமுனா பாய் மீது சந்தேகம் எழுந்து உள்ளது அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

Post a Comment

0 Comments