Subscribe Us

header ads

மனிதக் கல்லீரல் வேண்டுமா? விலை 5,100 ரூபாய் மட்டுமே!


உத்தர பிரதேசத்தில் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மனித கல்லீரலை விற்பனை செய்தது கேமராவில் பதிவாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி பிரேதச பரிசோதனை அறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மனித உடல் உறுப்புகளை விற்பனை செய்வதாக உள்ளூர் செய்தித்தாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே அந்த செய்தித்தாளைச் சேர்ந்த நிருபர்கள் அந்த ஊழியரை அணுகி மனித கல்லீரல் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அந்த நபரும் அவரும் பிரேத பரிசோதனைக்கு வந்த உடலில் இருந்து கல்லீரலை எடுத்து வந்து அவர்களிடம் அளித்துள்ளார்.

அவர் கல்லீரலை ரூ. 5 ஆயிரத்து 100க்கு விற்பனை செய்ததுடன் வேறு ஏதாவது பாகங்கள் வேண்டுமானாலும் தன்னிடம் கூறுமாறு தெரிவித்துள்ளார்.

இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சி நேற்று உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து, மீரட் மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மீரட் பகுதியில் மாய, மந்திரம் செய்பவர்கள் மனித உடல் உறுப்புகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மாவட்ட மாஜிஸ்திரேட் பங்கஞ் யாதவ் இது குறித்து கூறுகையில், இது மிகக் கொடிய குற்றம். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சதார் பகுதி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுள்ளனேன்.

மேலும், இது குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments