எம்.எஸ்.எம்.நூர்தீன்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான
வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமையிலிருந்து எதிர்வரும் 13ஆம் திகதிவரை
ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட
செயலகத்துக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுத் தாக்கலுக்காக
அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர், அதிகாரம் அளிக்கப்பட்ட
முகவர், அவரால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் அடங்கலாக 3 பேர் மாத்திரமே
வேட்புமனுத்தாக்கல் செய்யும் மண்டபத்தினுள் அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட
தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கிணங்க,
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும் கல்குடா தொகுதியில்
1,05,056 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
இதேவேளை, இம்மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பில் 199
நிலையங்களும் கல்குடாவில் 115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 வாக்களிப்பு
நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


0 Comments