தேர்தல் காலத்தில் புல்மோட்டை கனியமணல்
கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு தேர்தல்கள்
ஆணையாளரிடன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளது.
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில்
சட்டவிரோதமான முறையில் 60 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள
ராவயவின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலாமாக பௌத்த இனவாதிகள் முஸ்லிம்
சமுகத்திற்காக குரல் கொடுத்துவரும் ரிசாத் பதியுதீனை ஓரங்கட்டுவதற்கு பல
முயற்சிகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.


0 Comments