சவூதி அரேபியாவின் 'ஜெத்தா'வில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச குர்ஆன் போட்டியில், இம்முறை மகாராஷ்டிர மாநிலம் 'ரத்லாம்' என்ற ஊரை சேர்ந்த 9 வயது 'ஹாபிஸ் முஹம்மத் உமர்' 3-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இப்போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை சேர்ந்த பலர் தொடர்ந்து பங்கு பெற்றுவந்தாலும், முதல்முறையாக தற்போது தான், வெற்றிக்கனி பறிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்டோருக்கான இப்போட்டியில், 33 நாடுகளை சேர்ந்த 50 மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் 3-ம் இடம் பிடித்த முஹம்மத் உமருக்கு, உம்ரா பயண சலுகைகள், பாராட்டு சான்றுகளுடன், 20,000 சவூதி ரியால் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
-VKALATHUR-


0 Comments