Subscribe Us

header ads

இந்திய பெருங்கடலில் விமானத்தின் பாகம்: எம்.எச்.370 விமானத்தினுடையதா?

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்து சமுத்திரப் பகுதியில் காணாமல் போனதாகக் கருதப்படும் மலேசியன் ஏயார் லயின்ஸின் எம்.எச்.370 விமானத்தின் பாகம் எனச் சந்தேகிக்கப் படும் உடைந்த பகுதி ஒன்று இந்து சமுத்திரத்தில் மடகாஸ்காருக்குக் கிழக்கே உள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரீயூனியன் என்ற தீவுக் கூட்டங்களில் ஒன்றான செயின்ட் அன்ட்ரே தீவின் கடற்கரை ஓரமாகக் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சினாவின் பீஜியிங் சென்ற ஆர் 370 விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போனது. இதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. மேலும் உலக வரலாற்றில் காணாமல் போன விமானங்களை தேடும் பணிக்காக அதிக பணம் செலழிக்கப்பட்டது இந்த விமானத்தின் தேடுதல் பணிக்காகும்.
 
இந்நிலையில் எம்.எச்.370 விமானத்தின் இறக்கைப் பாகம் போன்று தென்படும் குறித்த சேதமடைந்த பாகம் தற்போது பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. இந்தப் பாகத்தை பிரெஞ்சு விமானப் படையின் உறுப்பினரான அட்ஜுட்டன்ட் கிறிஸ்டியன் ரெட்டோர்னட் என்பவரே முதலில் கண்டு பிடித்துள்ளார்.


இது காணாமல் போன மலேசிய விமானத்திற்கு சொந்தமானதான இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே காணாமல் போன விமானத்தின் சீரியல் எண்ணை வைத்து இதை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த பொருள் பல நாட்களாக தண்ணீரில் சிப்பியால் மறைக்கப்பட்டு இருந்ததாக இதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவு பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது என்பதால் அந்நாட்டு பொலிசார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Post a Comment

0 Comments