அபு அலா -
அக்கரைப்பற்று இலுக்குச்சேனை பக ுதியில் வசிக்கும் குடும்பங்களி ன் நலன் கருதி நீர் வழங்கல் மற் றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக் கப்பட்டுள்ளன.
இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர் க் குழாய்களை ஸ்ரீலங்கா முஸ்லி ம் காங்கிரஸ் தலைவரும், நகர அபி விருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூ ப் ஹக்கீம் நேற்று (27) மாலை தி றந்து வைத்து பாவணையாளர்களிடம் கையளித்தார்.
இந்தப் பிரதேசத்தில் வாழும் மக் கள் சுத்தமான குடிநீர் இன்றி கட ந்த 30 வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் அம்மக் களுக்கு குடிநீர் வசதியை வழங்கி அவர்களின் அவலநிலைக்கு முற்று ப் புள்ளி வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், மு.காவின் செயலாளரும் இராஜாங்க சுகாதார அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் முழக்கம் மஜீட், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




0 Comments