Subscribe Us

header ads

புத்தளத்தில் கொள்ளையர்கள் 20 பேர் கைது

-ஹிரான் பிரியங்கர 


புத்தளத்திலுள்ள சில பிரதேச வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் பயன்படுத்தி வரும் தண்ணிர் இறைக்கும் இயந்திரம், மற்றும் வீட்டு உபகரணங்களை கொள்ளையடித்ததுச் சென்ற 20 பேரை புத்தளம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேசன் தொழில் செய்பவர்கள் என  விசாரணையில் தெரியவந்துள்ளது. புத்தளம், கல்பிட்டி, பாலாவி, உடப்பு, வன்னிதீவு, ஆகிய பிரதேசங்களிலுள்ள 17 தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வாகன மின்கலம், சைக்கிள், வீட்டு கதவுகள்  என்பனவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments