உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் இளவரசரும், உலகின் மிகப்பெரும் செல்வந்தருமான இளவரசர் அல் வலீத் பின் தலால் தம்முடைய 120 பில்லியன் ரியால்களை தர்மம் செய்யப்போவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களான டுவிட்டர், யூரோ டிஸ்னி போன்றவற்றின் பங்குதாராரும், உலகளாவிய தொழிலதிபருமான இளவரசர் அல் வலீத் பின் தலால் தம்முடைய சொத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதற்காக தாம் ஒரு அறக்கட்டளையை தொடங்க உள்ளதாகவும், அந்த அறக்கட்டளையின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஏழைகளின் நல் வாழ்விற்கும், மருத்துவ உதவிகளுக்கும், பெண்களின் உரிமைக்கும் செலவிடப்போவதாக அறிவித்துள்ளார்.
பில் அறக்கட்டளையே தன்னை கவர்ந்து இந்த நலத்திட்டத்திட்கு அத்திவாரம் போட வைத்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி


0 Comments