நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்தது அந்த சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு தான் என தெரிவித்த ஜனாதிபதி எவ்வித சவால்களுக்கு மத்தியிலும் முன் செல்வதற்கு தமக்கு சக்தி உண்டு எனவும் தெரிவித்தார்.
மாவனல்லை, உஸ்ஸாபிட்டிய அரணாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தின் புதியதொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தை மாணவர்களின் பாவனைக்கு ஒப்படைக்கும் வைபவத்தில் இன்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.


0 Comments