உவைசியை கொலை'செய்வதன் மூலம், முஸ்லிம்களுக்கு 'பாடம்' புகட்டப் போவதாகவும் கொக்கரிப்பு..!!
மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் 'MIM' அமைப்பின் தலைவரும் எம்பியுமான அசதுத்தீன் உவைசியின் தலையை கொய்து வருபவருக்கு ரூ. 10 லட்சம் பசிசளிக்கப்படும் என்று ஹிந்து மகாசபை அறிவித்துள்ளது.
உவைசியை கொலை செய்யும் நபர்கள் சம்மந்தப்பட்ட வழக்கு செலவு முழுவதையும் ஹிந்து மகாசபை ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'ஹிந்து மகாசபை'யின் தேசிய தலைவர் கமலேஷ் திவாரி அளித்த பேட்டியாவது :
யாகூப் மேமன் தூக்குக்கு எதிராக பேசும் ஒவ்வொருவரும் தேசவிரோதிகள் தான்.
முதலில் குரல் கொடுத்த அசதுத்தீன் உவைசியை கொலை செய்வதன் மூலம், தேசவிரோதிகளுக்கு பாடம் புகட்டப்படும்.
உவைசியை கொலை செய்யும் திட்டம், ஏற்கனவே துவக்கப்பட்டு விட்டதாக கூறும் ஹிந்து மகாசபை தலைவர், வாய்ப்பு கிடைத்தால்,உவைசியை நானே கொலை செய்வேன் என்கிறார், கமலேஷ் திவாரி.
உவைசியை கொலை செய்யும் திட்டத்தை செயல்படுத்த நாடு முழுவதிலுமுள்ள ஹிந்து மகாசபை செயல்வீரகளையும் களத்தில் இறக்குவோம்.
100 'ஐடி' ஊழியர்களை பணியிலமர்த்தி உவைசியை கொலை செய்பவருக்கான பரிசு, அவர்தம் குடும்பங்களின் பாதுகாப்பு, வழக்கு செலவு ஏற்பு உள்ளிட்ட அதிகாரப் பூர்வ அறிவிப்புக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் என்றார், கமலேஷ் திவாரி.


0 Comments