நேற்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தன் நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை செய்துள்ளது.
சவுதி அரேபியாவின் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய அரசாங்க ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் வாரங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியிடப்படும் என்றும் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது பற்றி சவுதி அரேபியாவின் வெளிவுறவு மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் போலியானவையாக இருக்கலாம் எனவே அவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். ஆனால் அவர் அந்த ஆவணங்களை முற்றிலும் புறக்கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் உள்ள 247 அமெரிக்க தூதரகங்களில் இருந்து தங்கள் நாட்டுக்கு பரிமாறப்பட்ட ஆயிரக்கணக்கான ரகசிய குறிப்புகள் உட்பட இரண்டரை லட்சம் ஆவணங்களை, புலனாய்வு வலைத்தளமான விக்கிலீக்ஸ் கடந்த 2010-ம் ஆண்டு அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
0 Comments