கண்டிக்கு இன்று விஜயம் செய்திருந்த அவர் தலதா மாளிகையில் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்த கருத்தை வெளியிட்டார்.
பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக நாளை மறுதினம் அறிவிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்கப்படாது என வெளியான தகவல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையே தீர்மானங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
முன்னாள் கலாச்சார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கவை பல மணித்தியாலங்கள் விசாரித்தனர்.
பௌத்த விகாரைகளுக்கு நிதியொதுக்கீடுகளை எவ்வாறு மேற்கொண்டார் என்ற அடிப்படையில் அவர் ஏன் அவ்வாறான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதேவேளை, தம்முடன் இருப்பவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படுகிறதா இல்லையா என்பதை நேரம் வரும் போது பார்த்துக்கொள்ள முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.


0 Comments