இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தாயொருவர் தனது குழந்தையை கடித்து உண்ண முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் , அவர் தனது குழந்தையின் தலையை வெட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாரதி மொண்டல் என்ற அக்குழந்தையின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த உறவினர் அவரை தாயிடமிருந்து மீட்டுள்ளார்.
உறவினர் வந்து பார்க்கும் போது குழந்தையின் தலையில் இருந்து இரத்தம் வடிந்தோடிக்கொண்டிருந்ததாக அவ்வுறவினர் தெரிவித்துள்ளார்.
சம்பவ த்தையடுத்து கிராமவாசிகள் குழந்தையின் தாயை ஆத்திரத்தில் தாக்கியுள்ளனர். பின்னர் உறவினர்கள் பொலிஸிற்கு அறிவிக்கவே அவர்கள் அப்பெண்ணை மீட்டு கைதுசெய்துள்ளனர்.
குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் தந்தை கடந்த வருடம் தொழிலுக்காக டெல்லி சென்றதாகவும் , பின்னர் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments