அபு அலா -
அல் - ஹிம்மா நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயம் நேற்று சனிக்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.
அல் - ஹிம்மா நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு இந்த காரியாலயத்தை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், முன்னாள் தவிசாளர்களான எம்.ஏ.எம்.தாஹிர், எம்.ஏ.அன்ஸில் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, அல் ஹிம்மா நிறுவத்தினால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொள்ளும் பணம் செலுத்திய பற்றுச்சீட்டுப் பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பற்றுச் சீட்டுப் பத்திரங்களை இந்நிகழ்வின் பிரதம அதிதி றஹ்மத் மன்சூர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.











0 Comments