Subscribe Us

header ads

தேர்தலில் போட்டியிட வேண்டாம் MRரிடம் MY3 கோரிக்கை – மக்களின் அழைப்பை நிராகரிக்க முடியாது MR


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும்,இவ்வாறான கோரிக்கையை விடுப்பதற்கு தற்போது காலம் கடந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியலில் மீள களமிறங்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வருவதாகவும், தம்மால் அந்தக்கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இருவருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படவில்லை?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் சமால் ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்படதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும், ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் உறுதி செய்துள்ளன.-GTN-

Post a Comment

0 Comments