Subscribe Us

header ads

இஸ்லாமிய வங்கி முறையை தடைசெய்ய கோரி இன்று பொதுபல சேனா அமைப்பு மத்திய வங்கிக்கு


இன்று  பொதுபல சேனா அமைப்பு மத்திய வங்கிக்கு சென்று இஸ்லாமிய வங்கி முறையை தடைசெய்ய கோரிகோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பிரதானி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞான சார தேரர் உள்ளிட்ட அவ்வமைப்பின் முக்கிய அங்கத்தவர்கள் இன்று காலை பதினொரு மணிக்கு மத்திய வங்கிக்கு விஜயம் செய்யவுள்ள அதேவேளை இஸ்லாமிய வங்கி முறை இந்த நாட்டிற்கு அவசியம் அற்றது என கோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பு இஸ்லாமிய வங்கி முறைக்கு எதிராக கோஷம் எழுப்பிவந்த நிலையில் இன்று இந்த விடயத்தை பூதாகரமாக மத்திய வங்கிக்கு செல்வதாக தெரிவிக்கபடுகிறது.
-Madawala News-

Post a Comment

0 Comments