முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது பின்பகுதி உடைந்து போன கட்டெறும்பை போல் நடந்து கொள்வதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
பிபில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை கொண்டு நடத்த முன்னாள் ஜனாதிபதி தடையாக இருக்கக் கூடாது என கூறியுள்ளார்.
பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் வருகின்றது என்பதற்காக வாக்குகள் இருக்கின்றது என்று கூற முடியாது.
மகிந்த ராஜபக்சவின் கூட்டங்களுக்கு வந்த மக்கள் தொகையை கணக்கிட்டால் அவர் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயின் மகன். ஏன் அவருக்கு கட்சியை கொண்டு நடத்த விடுகிறார்கள் இல்லை.
இரண்டு, மூன்று முறை ஆட்சி நடத்தியவர். எதற்காக அவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
0 Comments