அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று மல்வத்து மஹா விகாரையில் மாநாயக்க தேரரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கவே எதிர்க்கட்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளதாக மாநாயக்க தேரர் குறிப்பிட்டதாக அவரை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
0 Comments