பொத்துவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முகுது மகா விஹாரை திறப்பு விழாவை முன்னிட்டு வீதிகளில் பௌத்த கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்த கொடியொன்றினை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பொத்துவில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பாக இவ்விஹாரைக்குப் பொறுப்பான விஹாராதிபதியினால் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பொத்துவில் 04 அறுகம்பை வீதியைச் சேர்ந்த சம்சுதீன் ஹம்றூத் (வயது 25 ) கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் இது திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு எனவும் ஹம்றூத் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவிலில் வரலாற்றுப் புகழ்மிக்க மண் மலைக்கு அருகில் எந்த ஒரு பௌத்த மகனும் குடியிருக்காத இவ்விடத்தில் சுமார் 60 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த தூபி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments