பல வருங்கால தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி வரும் கூகுள் தனது அடுத்த அதிரடி கண்டுபிடிப்பாக உடலில் சர்க்கரை அளவை அளக்க உதவும் ஸ்மார்ட் கான்டாக்ட் லென்சை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுளின் புதிய காப்புரிமை விண்ணப்பம் மூலம் இந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. சாதாரண கான்டாக்ட் லென்சைப் போலவே செயல்படும் இது, அணிந்திருப்பவரின் கண்ணீர் மூலமாக அவர் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கணக்கிடும் என கூறப்படுகிறது.
இந்த கான்டாக்ட் லென்ஸ் நடைமுறைக்கு வரும் போது ஊசி மூலம் விரல்களை குத்தி ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்யவேண்டிய தேவை இருக்காது.


0 Comments