![]() |
| File Picture |
யாரைப் பார்த்தாலும் ‘செல்பி’, எங்கு பார்த்தாலும் ‘செல்பி’ என ‘செல்பி’
மோகம், செல்போன் உபயோகிக்கும் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது.
இப்படித்தான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுவன்
ஒருவன் பொம்மைத் துப்பாக்கியை தன் நண்பனின் நெஞ்சில் வைத்த நிலையில் அதை
‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்தான்.
அவனது எண்ணம், அந்த ‘செல்பி’ படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் என்பதுதான்.
ஆனால் அவர்கள் பொம்மைத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, ‘செல்பி’ படம்
எடுப்பதை சற்று தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த போலீஸ்காரர்கள்,
அவர்கள் கொள்ளையர்கள் என தவறாக கருதி அவர்கள் மீது துப்பாக்கியால்
சுட்டனர்.
இதில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்த சிறுவன் குண்டு பாய்ந்து
பரிதாபமாக உயிரிழந்தான். பாவம் அவன், ‘செல்பி’ மோகம், தனது உயிரை பலி
வாங்கும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.
-Jaffna Muslim-


0 Comments