ஜமாஅத்தே இஸ்லாமிய நிறுவனத்தினால் புத்தளத்தில் இயங்கி வரும் குவைத் வைத்தியசாலை பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வைத்தியசாலையின் ஊடாக கண்ணில் வெள்ளை
படருதல் நோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2006 ஆம்
ஆண்டு முதல் இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை
பெற்றுள்ளனர்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் இதனால்
பாதிக்கப்பட்ட சகல இன மக்களுக்கும் இங்கு இலவச கண் சிகிச்சை
அளிக்கப்படுகின்றது. குவைத் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கடந்த
காலங்களில் வைத்தியர்கள் வருகை தந்து நோயாளர்களுக்கு சிகிச்சை
அளித்துள்ளனர்.
இம்முறையும் பாதிக்கப்பட்ட சுமார் 350 இற்கும் மேற்பட்டோருக்கு புத்தளம் குவைத் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு தங்கியிருந்து தேவையான அனைத்து
சிகிச்சைகள் உட்பட ஏனைய அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்வதற்கான
வாய்ப்பினை அவ்வைத்தியசாலை பெற்றுக் கொடுத்துள்ளது.





0 Comments