புத்தளம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள பாலாவி பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கண்டக்குழியைச் சேர்ந்த ஜிஸ்ரி ஜெஸ்மி வயது 23 மற்றும் ஹேசன் வயது 21 இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். காலம் சென்றவர்களில் ஒருவர் நோன்பு திறந்து விட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றவர் என்று செய்திகக் கூறுகின்றன.



0 Comments