முக எலும்பில் வளர்ச்சியடைந்த புற்றுநோய்க்கட்டியை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு பண வசதியற்ற நபரொருவர், தனக்குத் தானே சுயமாக சத்திரசிகிச்சைகளை செய்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
குவாங்ஸொயு நகரில் வசிக்கும் யு யி பேயி என்ற மேற்படி நபர், கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் 10 தடவைகள் சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
அவர் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட உபகரணங்களையும் தனது கையட க்கத்தொலைபேசியையும் பயன்படுத்தி தனது குளியலறை கண்ணாடியின் முன்பாக இந்த அறுவைச்சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
தனது அறுவைச் சிகிச்சைகள் ஒவ்வொன் றுக்கும் 30 நிமிடங்களை செலவிட்டுள் ளார்.
வறுமையில் வாடும் யிபேயிக்கும் அவ ரது மனைவிக்கும் 10 வயது மகள் ஒருவர் உள்ளார்.

0 Comments