மீரியபெத்த அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வீடுகள் கைளிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்ட தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
1. அவசரமாக துலங்குகின்ற அம்யுலன்ஸ் வண்டி வைத்திய காப்பீட்டு சேவையினை அறிமுகம் செய்தல்
ஏதாவது ஒரு விபத்தின் போது, அனர்த்தத்தின் போது அல்லது ஆபத்தொன்றில் சிக்கி உயிருக்காக போராடி கொண்டிருக்கும் நபர் ஒருவரின் உயிரை காப்பாற்ற, தொடர்ந்து காயப்படுதலை தடுக்க அவசரமாக தொழிற்பட வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிற்படும் அவசர அம்யுலன்ஸ் வசதிகள் இந்தியாவில் இருக்கின்றன.
எமது மிக நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இந்தியா இதனை பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக இந்திய பிரதமர் வாக்களித்தார்.
அதனடிப்படையில் சுதந்திர வைத்திய சேவையின் உயர் தன்மையினை மேலும் பேணும் வகையில் இவ்வாறான இலாப நோக்கமற்ற சேவையொன்றினை இலங்கையின் கிராமப் புறங்களை மையமாகக் கொண்டு 297 அம்யுலன்ஸ் வண்டிகளையும், 2000 பயிற்சி பெற்ற நிபுனர்களையும் வைத்து 4 கட்டங்களாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற் கட்டமாக மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் 88 அம்யுலன்ஸ் வண்டிகளை பயன்படுத்தி செயற்படுத்தவும், அதற்காக செலவாகும் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக பெற்றுக் கொள்ளவும் கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகார, சிறுவர், இளைஞர் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2. மாவட்ட செயலாளர்கள், அராசங்க அதிபர்கள் ஆகியோரை கொழும்புக்கு அழைக்கும் தடவைகளை மட்டுப்படுத்தல்
பல்வேறுபட்ட அமைச்சுக்களின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற மாநாடுகள் கலந்துரையாடல்களின் நிமித்தம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் ஆகியோரை கொழும்புக்கு அழைப்பதனால் அவர்களின் மாவட்டங்களில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் மாதத்தில் இரண்டு தடவைகள் மாத்திரம் கொழும்பில் பொதுவான மாநாடு ஒன்றை நடாத்தவும், அதில் சகல அமைச்சுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேரங்கள் ஒதுக்கப்பட்டு குறித்த அமைச்சு சம்பந்தமான விடயங்களை அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு சுதேச விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
3. சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற இயற்கை இறப்பரினை நிலையான விலைக்கு பெற்றுக் கொள்வதற்கு தேவையான செயன் முறை ஒன்றினை அறிமுகம் செய்தல்
இத்திட்டத்தினை நடைமுறை படுத்தும் போது அறிந்து கொண்ட குறைப்பாடுகள் மற்றும் கால தாமதம் என்பவற்றை கவனத்திற் கொண்டு சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் மூலம் இறப்பர் பொருட்களை விற்பனை செய்யும் போது நிலையான கட்டுப்பாட்டு விலையொன்று அவர்களுக்கு கிடைக்கும் வண்ணம் பதிவு செய்யப்பட்ட இறப்பர் வியாபாரிகள் மூலம் இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும், இத்திட்டத்தினை இவ்வருடம் செப்பெடம்பர் மாத இறுதி வரை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான 2063 மில்லியன் ரூபா நிதியினை திறைச்சேரியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
4. தேயிலை தொழிற்சாலைகளுக்காக வேண்டி வேலை மூலதன கடன் திட்டமொன்றினை அமுல்படுத்தல்
நிதி அமைச்சின் மேற் பார்வையின் கீழ் இலங்கை தேயிலை சபை மூலம் அனைத்து தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் வேலை மூலதன கடன் திட்டம் அரச மற்றும் வர்த்தக வங்கிகள் ஊடாக அமுல்படுத்துவதற்கும், இக்கடன் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் கடன் தொகைக்காக 2 சத வீத வட்டி நிவாரணம் திறைசேரியினால் இலங்கை மத்திய வங்கி ஊடாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் பெற்றுக் கொடுப்பதற்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
5. வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்தும் மன்றம் - 2015
தனியார் துறையினருக்கும் அரச துறைகளில் பணிபுரியும் சேவையாளர்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியினை குறைக்கும் நோக்கில் மாதத்துக்கு ஒரு முறையாவது குறித்த மன்றத்தினை நடாத்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
6. மொரகஹாஹேன நகர அபிவிருத்திக்காக அரச காணியினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உடைமையாக்கல்
மொரகஹஹேன நகரை சக்திவாய்ந்த உப நகரமாக மாற்றும் நோக்கில் அங்கு பேருந்து நிலையம், சந்தைத் தொகுதி, சந்தை, வார இறுதி சந்தை மற்றும் பொது விளையாட்டு மைதானம் என்பவற்றை துரித கதியில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏனைய அரச நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு, அதற்கு தேவையான 1.354 ஹெக்டயர் காணியினை கட்டுப்பாடற்ற கொடையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் வகையில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
7. திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இனங் காணப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அமுல் செய்யப்படுகின்ற பிரதேசங்களில் பாதிக்கப்படும் தரப்பினர்கள் சார்பில் நட்டஈடு செலுத்துதல்
திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கண்டி, காலி, திருகோணமலை மற்றம் அநுராதபுரம் ஆகிய பிரதான நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறை படுத்தும் போது காணிகளை இழக்கும் நபர்களுக்கு லார்க் மற்றும் சுபர் லார்க் முறைகளின் ஊடாக நட்ட ஈடு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காணிகளை பெற்றுக் கொள்வதற்கு எதிரான நீதிமன்ற செயன்முறையில் மாற்றம் ஏற்படுகின்றது.
8. தெமட்டகொடையிலுள்ள வீடமைப்பு திட்டத்தில் காணப்படும் வீடுகளை விற்பனை செய்தல்
மேற்படி வீடமைப்பு திட்டத்தில் வசிப்பவர்களுள் முழுக்கொடுப்பனவுகளையும் செலுத்திய 21 வீட்டுடைமையாளர்களுக்கு காணி உறுதியினை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
9. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கும், சுற்றுச் சூழல் விஞ்ஞானத்திற்கான ஆராய்ச்சி நிலையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாதிடல்
இனந் தெரியாத காரணியிநாலான சிறுநீரக நோயிற்கான பிரதான காரணி தொடர்பாக புலனாய்வு செய்வதற்கும் இலங்கையில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கான போதுமான நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை இனங்காண்பதற்காக மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாதிட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டிடத்தை மீளமைப்பு செய்தல்
நீர்கொழும்பு வைத்தியசாலை மேல் மாகாணத்தின் மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. வருடம் தோறும் மேல் மாகாணம் மற்றம் வட மேல் மாகாணம் ஆகியவற்றின் கிட்டத்தட்ட 360,000 வெளி றோயாளர்களுக்கும் 100,000 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கும் இவ்வைத்தியசாலையின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டிடத்தின் மீளமைப்பு பணியை தொடர்வதற்கும் மீளமைப்பு பணிகள் முடியும் வரை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றினுள் சிகிச்சைகளை அளிப்பதற்கும், குறித்த மீளமைப்பு பணிகளை தொடர 500 மில்லியன் ரூபா தொகையை அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11. நீதிமன்ற நீதிபதிகளுக்கான சுகாதார காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்துதல்
சகல நீதிபதிகளுக்காகவும் 35,000 ரூபாவாகிய வெளிவாரி சிகிச்சைகளுக்கு உட்பட்டு 500,000 ரூபாவாகிய காப்புறுதி தொகை ஒன்றினை வழங்குவதற்கும், குறித்த காப்புறுதி தொகையில் 75 சத வீத தொகையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கும் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. 2014.10.29 ஆம் திகதி கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியேற்றுவதற்காக வீடுகளை நிர்மாணித்தல்
குறித்த அனர்த்தத்தின் மூலம் அங்கு வாழ்ந்த 57 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 330 பேர் விபத்துக்குள்ளானதுடன் 34 பேர் உயிரிழந்து 05 பேர் காணாமல் போயுள்ளனர். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு துரிதமாக வீடுகளை பெற்றுக் கொடுக்கமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க 2015 ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வீடமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
13. காத்தான்குடி கழிவு நீர் வெளியகற்றும் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
குறித்த கருத்திட்டத்ததினை முன்னெடுத்து செல்வதற்காக வேண்டி தேவைப்படும் நிதியினை தேசிய மற்றும் சர்வதேச மூலங்களின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
14. களனி தென் குளக்கரை நிலை 11 (KKB ii) இற்கான வடிவமைப்பு மற்றும் கட்டட ஒப்பந்தம்
மேற்படி அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தச் செல்வதற்காக வேண்டி குறித்த ஒப்பந்தத்தை அமைச்சரவை மூலம் அமைக்கப்பட்ட உப குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. பாரிய மாத்தளை நீர் வழங்கல் செயற்றிட்டம் மற்றும் கண்டி வடக்கு பாத்ததும்பர நீர் வழங்கல் செயற்றிட்டம்
குறித்த இரு திட்டத்தினையும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான விமர்சனக் குழுவின் சிபார்சின் கீழ் முன்னெடுத்து செல்ல குறித்த வங்கியுடன் கலந்தாலோசித்து மேலதிக நடவடிக்கைகளை மேற் கொள்ள நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16. நிதியமைச்சின் ஆண்டறிக்கை - 2014
2003 ஆம் ஆண்டின் 03ம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 13 ஆம் பிரிவிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கமைய நிதியாண்டின் இறுதியில் அறிக்கையொன்றினை நிதியமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும். எனவே குறித்த தகவல்களை உள்ளடக்கித் தயாரிக்கட்ட நிதி அமைச்சின் ஆண்டறிக்கை 2014 இனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17. க்லைபொசட் கிரூமி நாசினி இறக்குமதி மற்றும் பாவனையினை தடை செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறித்த நாசினியை தடை செய்வது தொடர்பில் 2015.05.27 ஆம் திகதி பெறப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அனுமதிக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


0 Comments