-Safwan Basheer-
கடந்த பத்து வருடங்களின் பின்னர் எந்த தயக்கமும் இல்லாமல் இம்முறை நாம் ரமழானை கழிக்கிறோம், நமது சகோதரிகள் தயக்கமில்லாமல்
தராவிஹ் செல்கிறார்கள்.
உண்மையில் இந்த நிலைக்கு முக்கிய காரணம் இந்த நல்லாட்சிதான் என்பதை யாராலும் மருக்க முடியாது.
இந்த நல்லாட்சி உருவாக்கத்தின் சூத்திரதாரிகளின் மிக முக்கியமானவர் அமைச்சர் ராஜித சேனரத்ன.
அழுத்கம கழவரத்தின்போது முஸ்லிம்களுக்காக நேர்மையாக நின்று குரல் கொடுத்தவர் அவர்.
ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஹக்கீமை,ராஜித விமர்சித்தார் என்பதற்காக ராஜிதவை ஒரு இனவாதியாக சித்தரிக்க முட்படுவதை இந்ந போராளிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
உங்கள் தலைவர்மீதான விசுவாசத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் காட்டுங்கள்,ஆனால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு தேர்தல்வரும்போது அரசாங்கத்தை எதிர்க்கட்சியாக்கிவிடுவதும், பாராளுமன்றத்தில் ஆக்ரோசமாக இரண்டு உரையை எடுத்துவிடுவதும் போராளிகளுக்கு வேண்டுமென்றால் ச்சூனா இருக்கலாம் அதனால் சமூகத்துக்கு ஐந்து சதத்துக்கு பிரயோசனமில்லை.
மஹிந்த ஆட்சியில் கெபினட்டில் கருத்துச் சுதந்திரம் இருந்த போது உங்கள் தலைவர் பேசி சமூகத்துக்கு கிழிச்ச கிழியெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
இந்த நல்லாட்சி உருவாக்கத்தில் இலங்கையின் ஒவ்வொரு முஸ்லிம் பிரஜைக்கும் மிகப்பெரிய பங்குன்டு அந்த விசுவாசம் ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கத்தின் முக்கிய உருப்பினர்களிடமும் நிறையவே இருக்கின்றது.
அதை "தோற்றது சிங்கள அரசு வென்றான் ரவூப் ஹக்கீம்" என்பது மாதிரி மொக்கை கட்டுரைகளை எழுதி கெடுத்தவிடாதீர்கள்.


0 Comments