பிரான்சில் செயல்பட்டுவரும் இஸ்லாமிய ‘ஷொப்பிங்’ நிறுவனம் ஒன்று, அந்நாட்டு பெண்கள் தங்களுடைய கடைகளுக்குள் நுழைய தடை விதித்திருப்பது பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள Bordeaux நகரத்தில் De L'Orient à L'Occidental என்ற பிரபல பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டுவருகிறது.
அங்காடியின் உரிமையாளர் அண்மையில் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால், தன்னுடைய அங்காடியில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ள சர்ச்சைக்குரிய அறிவிப்பால் பிரச்சனை கிளப்பியுள்ளது.
அதாவது, எந்த மதத்தை சார்ந்த பெண்களாக இருந்தாலும், திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் தங்களுடைய கடைகளுக்குள் நுழைய தடை விதித்திருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பெண்கள் மட்டுமின்றி வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்று கிழமைகளில் ஆண்களுக்கும் இந்த கடையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட தினங்களில் ஷொப்பிங் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள் கட்டாயமாக தங்களுடைய கடைகளுக்குள் நுழைய கூடாது என குறிப்பிட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து பேசிய Bordeaux நகர மேயரான Alain Juppé, மக்களிடையே இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் இதுபோன்ற தடைகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டு பெண்கள் சம உரிமை அமைப்பான ACSE தலைவரான Naima Charai கூறுகையில், பெண்களின் உரிமையை பறிக்கும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளதாகவும், இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் அனைவருக்கு வாரத்தின் ஏழு நாட்களிலும் ஷொப்பிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Bordeaux நகரத்தின் துணை மேயரான Marik Fetouh கூறுகையில், இந்த நகரில் முதன் முதலாக நடைபெறும் மிக மோசமான இனப்பாகுபாடு பார்க்கும் செயல் என்றும், இந்த அறிவிப்பால் இஸ்லாமிய மதத்திற்கு தான் இழிவு ஏற்படும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வெளியாகும் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில், இனப்பாகுபாட்டில் ஈடுப்படும் இதுபோன்ற நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டைனையும் 75 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளன.


0 Comments