அமைச்சு பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முறைகோடாக நடந்து கொள்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் மக்களை அவர்கள் முட்டாள்களாக்க முடியாது என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.
தியத்தலாவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இன்று நாட்டில் (யாபாலனய) நல்லாட்சி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதற்கு பதிலாக பேய் நிர்வாகம் (யக்கா பாலனய) நிலவுவதாக மஹிந்த குறிப்பிட்டார்.
இந்த யக்கா பாலனய இன்னும் சில நாட்களில் நிறைவுக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச நடவடிக்கை தொடர்பில் அமரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தாம் கருத்துக் கூறினால், தாம் இனவாதி என்று பட்டம் சூட்டப்படுவதாக மஹிந்த கூறினார்.


0 Comments