அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பலரிடம் அக்கறை காணப்பட்டது. ஆனால், 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்தும் வீடு வழங்கப்படும்.
அந்த வீடு தற்போது திருத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க வசித்த வீட்டுக்கு இடமாறவுள்ளார். அந்த வீடும் தற்போது திருத்தப்பட்டு வருகிறது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவடைந்து வருவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,
அந்த அறிக்கை 2014 ஆம் ஆண்டுக்குரியது எனவும் அப்போது நாட்டின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்சவும் இருந்தனர் எனக் கூறியுள்ளார்.


0 Comments