இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து சிகாகோவுக்கு பயணிகள் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 282 பேர் பயணம் செய்தனர்.
விமானம் நடுவானில் பறந்த போது அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மியா மாதிஸ்தியேடே (42). என்ற பயணி விமான பணிப் பெண்ணிடம் தான் சாப்பிட நிறைய முந்திரி பருப்பு கேட்டார் அவர் கேட்ட அளவு தர மறுத்து விட்டார்.
உடனே விமானி அறைக்குள் நுழைந்த தியேடே 50 நிமிடம் ரகளை செய்தார். அதை தொடர்ந்து விமானத்தை அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட்டுக்கு விமானத்தை திருப்பி சென்று தரை இறக்கினர். பின்னர் தியேடே போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.


0 Comments