Subscribe Us

header ads

உகாண்டாவில் அவலட்சணமான மனிதர் 8–வது குழந்தைக்கு தந்தை ஆனார்


உகாண்டாவை சேர்ந்தவர் செபாபி (47). இவர் பிறவிலேயே முகம் அகோரமாக பிறந்தவர். எனவே, இவர் உகாண்டாவின் மிக அவலட்சணமான மனிதர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதை தொடர்ந்து அவர் நமந்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொணடார்.

இவர்களது திருமணம் கயாசங்கா நகரில் நடந்தது. அதை தொடர்ந்து அவருடன் குடும்பம் நடத்திய செபாபி சமீபத்தில் கேத் நமந்தாவின் 6–வது குழந்தைக்கு தந்தை ஆனார்.

ஏற்கனவே இவருக்கு முதல் மனைவி மூலம் 2 குழந்தைகள் உள்ளனர். கேத் 6 குழந்தைகளை பெற்றெடுத்து இருக்கிறார். இதன் மூலம் செபாபி 8 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.

தொடக்கத்தில் செபாபி செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். தற்போது பலவிதமான தொழில்கள் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். 

Post a Comment

0 Comments