Subscribe Us

header ads

பிரதியமைச்சர் அமீர் அலி கூறுவது சரியாகி விடுமா?



வீரகேசரி வாரவெளியீட்டில் நேற்று (28) பிரசுரமான சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ். அமீர் அலி அவர்களின் பேட்டியின் ஒரு சிறு பகுதியை கீழே தருகிறேன். அவர் தெரிவித்துள்ள கருத்து குறித்து எனது முகநூல் நண்பர்களின்மதிப்பீட்டை அறிய ஆவலாக உள்ளேன்.

கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையுமா?

பதில் : பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு சவாலாக அமையும் என்றே எதிர்பார்க்கிறோம். முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை காலமும் அதனை எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது எமது கட்சிதான்.முஸ்லிம் காங்கிரஸ் இறுதிக் கட்டத்தில்தான் தீர்மானம் எடுத்தது. ஆகவே இதுபோன்ற காரணங்கள் நிச்சயம் முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையும். எனவே, எமது கட்சி இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனத்தை உறுதி செய்யும்.

-Siddiqui Kariyappar-

Post a Comment

0 Comments