Subscribe Us

header ads

நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்- மசூர் மௌலானா


சிறுபான்மை மக்களுக்கு பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்த இருந்த 20 வது திருத்தம் இப்போதைக்கு நிறைவேற்றப்படாமலே பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களின் மத்தியில் சிறியளவிலான மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தோற்றுவித்திருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

இருப்பினும், இந்த மகிழ்ச்சி நீடிப்பதற்கிடையில் வேறொரு ரூபத்தில் சிறுபான்மை இனத்திற்கு நெருக்குவாரங்களை அல்லது இன்னல்களை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி நிரல்கள் இன்வாதிகளால் திரை மறைவில் தயாரிக்கப்பட்டு வருவதை நாம் உணர வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம்.

குறிப்பாக, முஸ்லிம்கள் இந்த நாட்டில் பல சவால்களைச் சந்தித்து இந்த நாட்டில் ஜீவிதம் நகர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தேசியப் பெரும்பான்மை கட்சிகளில் முஸ்லிம்களின் உற்ற தோழன் யார்? எதிரி யார்? என புரிந்து கொள்ள முடியாத சூனிய வலயத்தில் நாம் சிக்கித் தவிக்கிறோம்.

20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சியினரும் மற்றும் சுதந்திர கட்சியும் அதிக ஆர்வம் காட்டின. அதிலும், குறிப்பாக ஐ.தே.க. அதீதமான ஆர்வத்தை இருபதை நிறைவேற்றுவதில் காட்டியது.

எது எப்படியிருந்த போதிலும் அல்லாஹ்வின் உதவியால் முஸ்லிம்களுக்கு நிகழவிருந்த மாபெரும் அநீதியொன்று தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது அல்லது நிறுத்தப்பட்டிருக்கிறது என்றே நாம் சந்தோசப்பட்டுக் கொள்ள முடியும்.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் என்ன நடக்குமென யாராலும் கணித்து விட முடியாது. எனவே, முஸ்லிம் சமூகமாகிய நாம் அரசியலில் தூர நோக்குடனும், பரந்த பார்வையுடனும் சிந்தித்து செயற்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.


பாலையும் கள்ளையும் வெண்மையென நம்பி நாம் ஏமாந்து விடக் கூடாது.முஸ்லிம்களை கருவறுக்க நினைக்கிற இனவாத சக்திகளை இனம் கண்டு, அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஊடகப்பிரிவு



அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்

Post a Comment

0 Comments