போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வீட்டுக்கு வீடு விழிப்புணர்வுத் திட்டம் இன்று வடக்கு மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
MTV / MBC ஊடக வலையமைப்பு, நியூஸ்பெஸ்ட், தேசிய அபாயகர ஔடதங்கள்
கட்டுப்பாட்டு சபை ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை
முன்னெடுத்துள்ளன.
நாட்டின் 72 பகுதிகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (26) யாழ்ப்பாணத்தில் கொட்டடி, குருநகரிலும் கிளிநொச்சியில்
கனகபுரம் மற்றும் சாந்தபுரத்திலும், முல்லைத்தீவில் நாவற்காடு, பொன்னகர்
மற்றும் பூதன்வயலிலும் வவுனியாவில் தோணிக்கல், மூன்றுமுறிப்பு மற்றும்
தேக்கவத்தையிலும் மன்னாரில் மன்னார் நகரிலும் முதற்கட்ட நிகழ்வுகள்
ஆரம்பமாகவுள்ளன.


0 Comments