மத்திய கொழும்பு அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான பைரூஸ்
ஹாஜியின் எதிர்கால பாராளுமன்ற தேர்தலினை முக்கியத்துவப்படுத்தி மத்திய
கொழும்பு பீர்சாஹிப் வீதியை அண்டிய பிரதேசத்து மக்களுடன் இடம் பெற்ற
கூட்டத்தில் வருக்கின்ற கொழும்பு மாநஅர சபைத் தேர்தலில் பீர்சாஹிப்
பிரதேசத்திலிருந்து முக்கியமான ஒருவரை தேர்தலில் களமிறக்கி அவரை மாநகர
சபைக்கு அனுப்புவதனை வாக்குறுதி அளிப்பதாக அங்கு உரையாற்றும் பொழுது
பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய பைரூஸ் ஹாஜி
தனது அரசியல் வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி
எனது மக்களுக்கக செய்கின்ற உதவிகளோடு சேர்த்து செய்கின்ற எந்த பொது வேலையாக
இருந்தாலும் அதனை பலர் பார்க்க வேண்டும் என்பதற்காக விளப்படுத்தி செய்வது
கிடையாது என தெரிவித்ததோடு, மத்திய கொழும்பிலிருந்து ஒருவர் பாராளுமன்றம்
செல்கின்றார் என்றால் அவர் மத்திய கொழுபினை வசிப்பிடமாக கொண்டிருக்க
வேண்டும்.
ஆகவே இதனை எமது மக்கள் முக்கியமாக
கருத்தில் வருக்கின்ற தேர்தலில் மத்திய கொழும்பிலிருந்து நூற்றுக்கு நூறு
உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு
இப்பிரதேச மக்கள் அணிதிரள வேண்டும் என கூட்டத்துக்கு
சமூகமளித்திருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
0 Comments