முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி வரையில் எவ்வித பிரபல
மேடைகளுக்கு ஏறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது, அது பிரபல சோதிடரின்
அறிவுரைக்கமைய என தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல சோதிடரின் அறிவுரைக்கமைய
அந்நாட்களுக்குள் மஹிந்த ராஜபக்ச மேடைகளில் ஏறினால் அவருக்கு பெரியளவிலான
விபத்தொன்று ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதாகவும், மக்கள் மத்தியில் மேலும்
சரிவு ஏற்படுவதற்கு காரணமாகி விடும் எனவும் கூறப்படுகின்றது.
பல மாத காலமாக விமல், வாசு, தினேஷ்,
கம்மன்பில போன்ற அரசியலில் அநாதைகளாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்
மஹிந்த ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்கின்ற பேரணி மேடைகளில் அவர் ஏறாமைக்கு
காரணமும் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்பாடு செய்யப்படுகின்ற அனைத்து
பேரணிகளிலும் மஹிந்த கலந்து கொள்வார் என அறிவித்த போதிலும் அவர் எந்த ஒரு
பேரணி மேடைகளிலும் ஏறுவதில்லை.
மாத்தறையில் இடம்பெற்ற பேரணியில் மக்களை
சேர்த்துக் கொள்வதற்காக மஹிந்த மேடை ஏறுவார் என பேரணி அமைப்பாளர்கள்
அறிவித்த போதிலும், அவர் சிறிது நேரம் மக்கள் மத்தியில் இருந்து விட்டு
சென்றுவிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த
தோல்வியடைவார் என கூறிய இச் சோதிடர் மஹிந்த ராஜபக்சவின் கிரகநிலை குறித்து
மேற்கொள்ள வேண்டிய யாகம் பற்றி அறிவுரை வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவும் அவரின் அறிவுரைக்கமைய செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சோதிடரின் அறிவுரைக்கமைய தற்போது சிறப்பு மந்திர தாயத்துகள் தாயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
விகாரைகளில் சென்று மத வழிபாடுகளில் தொடரந்து ஈடுபட வேண்டும் எனவும் சோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
இப் பிரபல சோதிடரின் கருத்திற்கமைய
மஹிந்த மீண்டும் 21 வருடத்திற்கு பிறகே அதிகாரத்திற்கு வரமுடியும். அதன்
போது அவரது வயது 90ஐ நெருங்கியிருக்கும்.
அதுவரை தன்னுடைய அறிவுரைக்கமைய செயற்பட்டால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகாமல் இருக்கலாம் என சோதிடர் கூறியுள்ளார்.
எனவே சோதிடரின் அறிவுரைக்கு தலையசைத்த
மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வரும் கனவை தகர்த்து விட்டு தனது மான் நாமல்
ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.(TW)
0 Comments