Subscribe Us

header ads

கவிஞர் ஹுதா உமரின் நான்காவது கவிதை தொகுப்பு நூலான "நாம் சொல்ல மறந்த கதை"


இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கவிஞர் ஹுதா உமரின் நான்காவது கவிதை தொகுப்பு நூலான "நாம் சொல்ல மறந்த கதை" கவிதை தொகுப்பு  நூலொன்று எதிர்வரும் ஜூன் இறுதி வாரத்தில் கட்டார் நாட்டில் உள்ள இஸ்லாமிய  கலை கலாசார அரும்காட்சிய கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.இந் நூல்  வெளிநாட்டு வாழ்க்கையின் இன்ப,துன்பங்கள்,ஏக்கங்கள் ஆசைகளின் பிரதிபலிப்புக்கள் என வெளிநாட்டு வாழ்வை சித்தரித்ததாக அமைய பெற்ற இரசனை மிக்க கவிதைகள் அடங்கிய தொகுப்பாகவே அமையபெற்றுள்ளது.

 "நாம் சொல்ல மறந்த கதை" கவிதை தொகுப்பு  நூலில் இலங்கை மற்றும் தென்னிந்திய கலைஞர்கள்,கவிஞர்களின் வாழ்த்துக்களும் ஆசிகளும் கொண்டு  150 பக்கங்களை கொண்ட இந்த நூலின் வெளியிட்டு விழாவில் கட்டார், இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் மற்றும் அரபு தேசத்து கலைஞர்களும் ,மற்றும் கட்டார் நாட்டின்  முக்கிய உயர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

தனது பாடசாலை காலம் முதல் கவிதை,சிறுகதை,கட்டுரை,அறிவிப்பு,நடிப்பு,இயக்கம்,ஊடகவியல் போன்ற துறைகளில் பல புனைப்பெயர்களுடனும்,சொந்த பெயர்களிலும் எழுதி NYSCO  தேசிய விருதுகள் அடங்கலாக தேசியத்தையும் தாண்டி ,சர்வதேச ரீதியிலும்  பல விருதுகளை  வாங்கி குவித்திருக்கும் இவரின்  கடந்த கால படைப்புக்களான  "பனை ஓலைகள்" ,"கருவறை சொந்தங்கள்","இசைபாடும் மூங்கில் காடு ' போன்றவை  பாரிய வரவேற்பை பெற்றவைகளாகும்.  

செய்தி : மாதவி 

Post a Comment

0 Comments