Subscribe Us

header ads

சிலர் மஹிந்தவுடன் ஆஞ்நேயர் கோவிலில் பூஜை நடத்துகின்றனர் : யோகராஜன் எம்.பி


அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளிகளுக்கு வீடமைப்புக்கு 7பேர்ச் காணி வழங்கியதையும் வடகிழக்கு சிறுபான்மை சமூகத்தினரின் காணி விடுவிக்கப்பட்டதையும் சகிக்க முடியாதவர்களே அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றார்கள். அகதி முகாம்களிலும் லயன்களிலும் சிறுபான்மை தமிழர்களை அடக்கி வைப்பதற்கு ஆதரவளித்தவர்கள் இன்று அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு மேதாவிகளை போல கருத்து வெளியிட்டு வருவது சுயநல வெளிப்பாடுகளாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

பொகவந்தலாவை லொயினன் தோட்ட நோத்கோ பிரிவில் ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்தின் ஆதவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையதாவது, 
வெகுவிரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை அமோக வெற்றி பெறச் செய்து தனி வீடு அமைப்பதிலும் காணி உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் ஐக்கியமாக செயல்படுவது அவசியமாகும். 
மஹிந்த ராஜபக் ஷவுக்கு மாடி லயன் கட்டுவதற்கு ஆதரவளித்தவர்கள் இன்று அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு அவசர அவசரமாக தங்களது பலத்தை வெளிப்படுத்துவற்கு முயற்சித்ததாலேயே காணி  உறுதிப்பத்திரம் வெறும் கடிதமாக மாறியது.
சமூக அக்கறையுடன் செயல்படும் பக்குவம் இல்லாதவர்களின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மக்களை பாதித்து வருவதற்கு இதுவே நல்ல உதாரணமாகும். 
800 ரூபாய் சம்பள உயர்வை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட 2500 ரூபாவையும் நாளாந்தம் 100ரூபா என்ற அடிப்படையில் சேர்த்து வழங்க வேண்டும்  என்பதில்  உறுதியாக செயல்பட்டு வருகின்றோம். 
அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து அரசியல் இலாபம் தேடுபவர்களே மஹிந்த ராஜபக் ஷவை  அழைத்துக் கொண்டு ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை நடத்துகின்றார்கள். தோட்டங்களில் கம்பனிகளால் மேற்கொள்ளப்படும் வேலைப்பளு மோசடிகளையும் ஊழல்களையும் எதிர்த்து நீதிமன்றம் செல்வதற்கு ஆதரவளிப்போம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் போடும்  அண்ணன் தம்பிகள் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெறுமனே 7ரூபாவை பெற்றுக் கொடுத்து விட்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடிச் சென்றதை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆசிரியர் நியமனங்களில் மத்திய மாகாண சபையினரின் அசமந்த போக்கினால் புறக்கணிப்புக்களை மேற்கொண்டு வருவது சமூகத்திற்கு எதிரான செயலாகும். மஹிந்தோதய கட்டிடங்களை திறப்பதற்கு எவறும் தடையாக இருக்கக் கூடாது. தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி விவகாரத்தில் அரசியல் சாகசம் புரிவதற்கு இடமளிக்காமல் தொழிற்சங்க தனிமனித  அரசியல் அதிகாரங்களை முறியடிப்பதற்கு அனைத்து மக்களும் ஐக்கியமாக இணைந்து செயல் படுவது அவசியமாகும் எனவும் கூறினார்.

Post a Comment

0 Comments