Subscribe Us

header ads

மனைவியையும் மகளையும் ரவி கருணாநாயக்க காட்டிக்கொடுத்துள்ளமை கவலையளிக்கிறது.


ரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு தனது மனைவியையும் மகளையும் காட்டிக்கொடுத்துள்ளமை கவலைக்குறிய விடயம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.



அவர் கலந்துகொண்ட தனியார் தொலைகாட்சி அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.



மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..



அலோசியசிடம் இருந்து ரவி கருணாநாயக்க லஞ்சம் பெற்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ரவி கருணாநாயக்க தனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீது பழியை போட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.



உண்மையில் இது மிகவும் மோசமான செயற்பாடு.தன்னை காப்பாற்றிக்கொள்ள குடும்ப உறுப்பினர்களை காட்டிக்கொடுக்க அவர் முற்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குறிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments