Subscribe Us

header ads

'மஹாராஜ ரிங் டோன்' ஆகி 'அப்பாச்சி' ஆகிய இலங்கையின் நவீன ஹிட்லர்


'நினைவு வைத்துக்கொள்ள வேண்டும், செஞ்சிலுவை படையின் தாதியரை எமது தலைவர் இதயபூர்வமாக நேசிக்கின்றார். அதனைப் போன்றே நீங்களும் அவரை இதயபூர்வமாக மதிக்க வேண்டும்.' அதன் பின்னர் நாம் அனைவரும் வலது கையை உயர்த்தி 'ஹிட்லர் வெற்றியீட்டடும்' என உரத்த குரலில் சத்தமிட்டோம். 'இந்த ஹிட்லர் என்ற மிருகம் அழிந்து போகட்டும்' என நான் மனதில் வேண்டிக் கொண்டேன். மூலம் - Edith Hahn Beer the Nazi Officer’s Wife  என்ற நூல்

மஹிந்த ராஜபக்சவின் 'விஹாரை அரசியலின்' அபயாராமய காரியாலயத்தில் மேற்கொண்ட அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றை நேற்று பார்வையிடக் கிடைத்தது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்னரைப் போன்று ராஜபக்ஸவின் அன்றாட அனைத்து நடவடிக்கைகளையும் 'செய்தி' எனக் கருதி செய்தி ஒளிபரப்புச் செய்யும் தெரண தொலைக்காட்சியில் பார்த்தேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஜய அபிமானி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருடன் மஹிந்த ராஜபக்ச நடத்திய சந்திப்பு செய்தியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் இவ்வாறு கூறினார்.

'நான் ஓர் கோரிக்கை முன்வைக்கின்றேன். மஹாராஜாவே என்ற பாடலை ரிங் டோனாக செல்லிடப்பேசிகளில் போடுவோம் என நான் எமது உறுப்பினர்களிடம் கோருகின்றேன் என கூறினார்.

தம்மால் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஓர் அடிமை மொழியை குறித்த நபர் பகாகின்றார் என்பதனை புரிந்து கொள்ளும் ஞானம் மத்தியில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக்ஸவிற்கு துளியும் இருப்பதாக தெரியவில்லை. அந்தக் கோரிக்கைக்கு மேலும் வலுவூட்டும் வகையில் 'அதனைவிடவும் அப்பச்சி (தந்தை) எனப் போடுவது நன்றாக இருக்கும் என ராஜபக்ஸ கூறினார்.

இந்த செய்தியை பார்த்த போது நாம் எங்கு இருக்கின்றோம், எந்தக் காலம் என்பதே எனக்குள் எழுந்த கேள்விகளாகும். அது மட்டுமல்ல இதைப் பார்த்த போது அடிமை ஒருவருக்கும் எஜமானர் ஒருவருக்கும் இடையிலான சம்பாசனையே நினைவுக்கு வருகின்றது. கடந்த காலம் முழுவதிலும் மஹிந்த ராஜபக்ஸ அடிமை யுகமொன்றை நோக்கியே நாட்டை தள்ளியிருந்தார். அதன் ஆவிகள் இன்னமும் காணக்கிடைக்கின்றது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களில் பலர் உடம்மை வளர்த்துக்கொண்ட அளவிற்கு மூளையை வளர்த்துக்கொள்ளவில்லை. வெள்ளைச் சாரம் கட்டி மூளையில்லாத பல உறுப்பினர்களை நான் கண்டிருக்கின்றேன்.

இந்த உறுப்பினர்களிடமிருந்து அடிமைத் துர்நாற்றத்தை உணர முடிகின்றது. நாகரீக உலகின் கலாச்சாரங்களுடன் பரினமித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் பரிணாம வளர்ச்சியற்ற அடிமை வாழ்க்கையின் ஆழமான பகுதிகளை ஸ்பரிசித்து வருகின்றமை அல்லவா? அவர்களினால் கொண்டு செல்லப்படும் இந்த எண்ணக்கரு அடிமை மனோ நிலையல்லவா? இது அடிமை வாழ்வின் ஓர் ஒப்புதல் என வாக்குமூலம் இல்லையா?

யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ மக்களின் தலை, வயிறு மற்றும் பின்புறம் ஆகியவற்றை ஸ்பரிசித்து கட்டியெழுப்பிய நாகரீகமற்ற கலாச்சாரமற்ற நிலைமையில் மக்கள் இன்று மூழ்கி மரத்துப் போயுள்ளனர். அடிமையாகி மாறி தமது வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் ஒருவரை மன்னராக போற்றி புகழ்ந்தேத்தும் அளவிற்கு எம்மவர்கள் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஸவினால் உருவாக்கப்பட்ட அடிமைக் குழியில் புதைண்டுள்ளனர். மஹிந்தவை மன்னாராக விழிக்கும்போது அனிச்சையாகவே அழைப்பவர்கள் அடிமைகள், ஏவலாளிகள் என்பதனை உணர்வதற்கு ராஜபக்ஸ ஆட்சி அவகாசம் வழங்கவில்லை. (மஹிந்த ராஜபக்ஸவினால் வேண்டுமென்றே பணம் செலவழித்து இந்த நிலைமை உருவாக்கப்பட்டது என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.)

இவ்வாறு சொந்த மக்களை அடிப்பமைப்படுத்தி அதன் ஊடாக தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்ளும் நிலைமையானது பாசிசவாத தலைவர்களின் பண்பியல்பாகும்.

பாசிசவாத கொள்கையின் அடிப்படையில் மஹிந்தவினால் உருவாக்கப்பட்ட அடிமை 'மஹாராஜ ரிங் டோன்' பற்றி சொல்லும்போது, 'அப்பாச்சி' அதனை விடவும் நல்லது என மஹிந்த ராஜபக்ஸ கூறினார். இதன் ஊடாக மக்களிடம் ஊறிப் போயுள்ள அடிமை உணர்வுகளை தொடர்ந்தும் நிலைநாட்டி அதனை வலுவூட்டச் செய்யும் முயற்சி வெளிப்படுகின்றது. 'நான்தான் உங்களின் ஒரே ஒருவன்'என்பதனையே மஹிந்தன் இதன் மூலம் கூற விழைகின்றார். கட்சி உறுப்பினர்கள் அறிவார்ந்த ஊடாடுதலின் மூலம் தனது எண்ணங்களை வெளிப்படுத்த விடாது, அவர்களை அடிமைப்படுத்தி தொடர்ந்து அவர்கள் மீதேறி சவாரி செய்யும் முயற்சியை மஹிந்த மேற்கொண்டு வருகின்றார்.

மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு எதிராக பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரைண செய்யப்படுகின்றது, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இது குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. சில ராஜபக்ஸக்கள் சிறையில் அடைக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஓர் நிலையில் மஹிந்த ராஜபக்ஸ அடிமை பானத்தை பருக வைத்து அடிமைகளை உருவாக்கிவருகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தரப்பினர் தொடர்ந்தும் இந்த அடிமை எண்ணத்தில் ஊரிப்போய் மஹிந்தவிற்காக குரல் கொடுக்கபதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இவ்வாறானவர்கள் தங்களது பிள்ளையின் சமூகக் கல்வி புத்தக்தையேனும் எடுத்து படித்து புத்தி தெளிந்து கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச மக்களின் மனதுகளில் அடிமை எண்ணங்களை விதைத்து தனது பிழைகளை மூடிமறைத்து தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனங்களுக்கு என்றாவது பதில் சொல்ல வேண்டியிருக்கும். மரக்கறி உணவு வகைகளை உட்கொண்ட ஹிட்லர் இவ்வாறு செயற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. ஜெர்மனியைப் போன்ற இன்று உலகின் நாகரீக சமூகம் ஹிட்லரை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றது அவரது இறுதி முடிவு என்ன என்பதனை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அல்லது வாசுதேவ நாணயக்கார போன்ற குழந்தைகளிடம் கேட்டறிந்து கொள்ள முடியும்.

ராஜபக்ஸவினால் உருவாக்கப்பட்டு வரும் அடிமை எண்ணங்களை இல்லாதொழித்து, ராஜபக்ஸக்கள் போன்ற மூர்க்கத்தனமான ஆட்சியாளர்களின் கொள்கைகள் வியாபிப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற புரிதல் அனைத்து பிரஜைகளின் உள்ளங்களினதும் உதயமாக வேண்டும்.
குளோபல் தமிழ்ச் செய்திகள்

Post a Comment

0 Comments