Subscribe Us

header ads

அலி பாபாவின் திருடர்கள் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்– ஐ.தே.க


அலி பாபாவின் திருடர்கள் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆட்சி செய்தவர்கள் இவ்வாறு ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட திருடர்கள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மரத்தை வெட்டி விட்ட போதிலும் வேர்கள் இன்னமும் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீளவும் பாராளுமன்றிற்குள் பிரவேசிக்க முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை பலத்துடன் தேர்தலில் வெற்றியீட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இயலுமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் ஆதரவினால் மட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதாக முன்வைக்கப்படும் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments