சவுதி அரேபியாவின் நட்சத்திர ஹோட்டல்களில் சமையல்காரியாக (ஷெஃப்) பணியாற்ற சவுதிப் பெண்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை சவுதி அரேபபியா தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் சமையல்காரியாக மாத்திரமே பணியாற்ற முடியும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
சவுதி நட்சத்திர ஹோட்டல்களில் 75 சத வீதமானவர்கள் வெளிநாட்டினரே தங்குகின்றனர். இவர்களுக்கு சவுதி உணவை சரியாக சமைத்து வழங்க வெளிநாட்டு சமையல்காரர்கள் தவறி வருகின்றனர்.
சவுதிப் பெண்கள் உள்ளுர் உணவுகளை வகைவகையாகச் சமைத்து காட்சியறைகளிலும், கண்காட்சிகளிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி, தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
எனவே சுவுதியின் சிறந்த சமையல்காரப் பெண்களுக்கு இவ்வாறான ஹோட்டல்களில் சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் அது சவுதி உணவின் தரத்தையும், பாரம்பரியத்தையும் நிச்சயமாக வெளிப்படுத்தும் எனவும் சவுதி அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டு இருக்கின்றது.
இவ்வாறான ஹோட்டல்கள் வெளிநாட்டுக் காரர்களை சமையல்காரர்களாக பணிக்கு அழைக்கின்றனர். அவர்கள் சர்வதேச உணவுகளையே தினமும் சமைத்து வருகின்றனர். இதனால் சவுதி உணவின் பாரம்பரியமும் அதன் சுவையும், தரமும் விருந்தினர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என ஓர் அதிகாரி கூறுகிறார்.
0 Comments