Subscribe Us

header ads

இலங்கையில் பாடசாலை மாணவா்கள் 23 பேருக்கு எய்டஸ் நோய்!



இலங்கையில் பாடசாலை மாணவா்கள் மத்தியில் எய்ட்ஸ் நோய் பரவி வருவதாக பாலியல் நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளா் டொக்டா் சிசிர லியனகே தொிவித்துள்ளாா்.

கடந்த (2014 )வருடம்  22 மாணவா்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டதாகவும்,  இவ்வருட ஆறு மாதத்திற்குள்  23 மாணவா்கள்  இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் டொக்டா் சிசிர லியனகே தொிவித்துள்ளாா்.


இவ்வருட ஜனவாி முதல் ஜுன் வரை மேற்கொள்ளப்பட்ட பாிசோதனைகளின் போது 100 போ் எச்ஐவி வைரஸ் தொற்றினால் எய்ட்ஸ் நோயாளிகளாக மாறியிருப்பதாகவும் இதில் 65 வீதமானவாா்கள் ஆண்கள் என்றும், இவா்கள் 25க்கும் 49 வயதிற்கும் உட்பட்டவா்கள்  என்றும் சிசிர லியனகே கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments