முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை பார்வையிடச் சென்றமைக்கான காரணத்தை அமைச்சர் ராஜித சேனாரட்ன ஊடகங்களுக்கு விளக்கியுள்ளார்.
பசில் ராஜபக்ஸ தமது பழைய நண்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பசில் ராஜபக்ஸவை, கடந்த சனிக்கிழமை ராஜித சேனாரட்ன சென்று பார்வையிட்டிருந்தார்.
நீண்ட கால நண்பர் என்ற ரீதியில் தாம் பசிலின் சுக நலன்களை விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி முதல் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த பசில் ராஜபக்ஸ, அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.


0 Comments