Subscribe Us

header ads

ஜனாதிபதியை பாராட்ட வேண்டும் : ஹக்கீம்


ஜனாதிபதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையிலுள்ள பல அதிகாரங்களைக் குறைப்பதற்கு இந்த 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் முதன் முறையாக இந்நாட்டின் வரலாற்றிலே தனது சொந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கும், விட்டுக் கொடுப்பதற்கும் தயாரான முதலாவது அரசியல் தலைவர் என்கிற ஒரு உன்னத நிலைக்கு எங்களது ஜனாதிபதி  வந்து அதைச் செய்து காட்டியதற்காக நாங்கள் எங்களுடைய ஜனாதிபதியை பாராட்ட வேண்டும்  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார். 
 ஏனென்றால் வேறு எந்த முன்னாள் ஜனாதிபதிக்கும் இல்லாத துணிவு தான் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாக வேண்டும் என்ற அடிப்படையிலே தன்னுடைய அதிகாரங்களைத் தானாகவே குறைத்திருக்கின்றார். இதில் இருக்கின்ற முக்கியமான அம்சங்கள் என்பது இந்நாட்டின் அரசியலிலே பாரிய தாக்கம் செலுத்தக் கூடிய விடயங்கள் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.
புத்தளம் பாலாவி ஹூசைனியாபுரம் மீள்குடியேற்றக் கிராமத்தில்  இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Post a Comment

0 Comments