வில்பத்து சரணாலயத்தை அண்மித்த காணிகளை மீண்டும் அளவீடு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில்
முன்னெடுக்கப்படுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் காடழிப்பு இடம்பெற்றதாக
கூறப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த
அளவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் மற்றும் மகாவலி
அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமை வன இலாகா திணைக்களம் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த அளவீட்டுப் பணிகளை முன்னெடுத்திருந்தது.


0 Comments