உலகிலேயே மிக அதிவேகமான வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்கி சாதனை படைத்துள்ளது தாய்லாந்து விமான நிலையம்.
வை-ஃபை இண்டர்நெட் வேகத்தை மதிப்பீடு செய்து வரும் பிரபல இணையதளமான ரோட்டன்வைபை.காம் ஒரு ஆய்வை நடத்தியது. உலகம் முழுவதிலும் உள்ள 130 நாடுகளின் முக்கிய விமான நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் வை-ஃபை இண்டர்நெட் வேகத்தை பற்றி ஆராய்ச்சி செய்தது.
அதில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் வை-ஃபை சேவை அதிக வேகத்தை பதிவு செய்துள்ளது. அங்கு ஒரு நொடிக்கு 41.45 எம்.பி.பி.எஸ். வேகத்தில் இண்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் 30.98 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் அமெரிக்காவின் சத்தானோக விமான நிலையம், மூன்றாவது இடத்தில் 19,45 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் அயர்லாந்தின் டப்லின் விமான நிலையம் உள்ளது. வழக்கம் போலா முதல் 10 இடத்தில் ஒரு இந்திய விமான நிலையமும் கூட இடம் பெறவில்லை.


0 Comments